உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து

விகடன்  விகடன்
உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து

உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பூரி - ஹரித்வார்- கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில், முசாபர் நகர் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை வாரியப் படைகள், மீட்புப் பணிகளுக்காக விரைந்துள்ளது.  மாலை 5.50 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சில பயணிகள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, "சம்பவ இடத்துக்கு மூத்த அதிகாரிகளை செல்ல உத்தரவிட்டுள்ளேன். மருத்துவக் குழுக்களும் விபத்து நடந்த இடத்துக்கு சென்றுள்ளனர். மிக வேகமாக மீட்புப் பணிகள் நடைபெறும்" என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு ரயில்வே உயரதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். இது குறித்து இந்திய ரயில்வேயின் உயரதிகாரி அனில் சக்சேனா, "காயமடைந்தவர்கள் குறித்து விவரங்கள் தெரியவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

மூலக்கதை