பசிபிக் பெருங்கடலில் பெரும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவு!

விகடன்  விகடன்
பசிபிக் பெருங்கடலில் பெரும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவு!

பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

பசிபிக் பெருங்கடலில் பல குட்டித்தீவுகள் அமைந்துள்ளன. அதில் நியூசிலாந்து நாட்டுக்கு அருகிலுள்ள டோங்கா தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வில் கட்டடங்கள் குலுங்கின. இந்த மிதமான அதிர்வினால் வீடுகளிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேறினர்.

சில நேரமே நீடித்த இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனாலும், தீவின் கட்டமைப்பு இழப்புகள், உயிர் இழப்புகள் இதுவரையில் முழுமையாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதிகாலையில் ஏற்பட்ட  நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது வரையில் உடனடி சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மூலக்கதை