குஜராத்தில் 223 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி கண்டுபிடிப்பு: 12 பேர் உயிரிழந்ததால் மக்கள் பீதி

தினகரன்  தினகரன்

சூரத்: குஜராத்தில் பன்றிக்காய்ச்சலால் மேலும் 12 பேர் உயிரிழந்திருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி முதல் இன்றைய நாள் வரை குஜராத்தில் பன்றிக்காயச்சல் காரணமாக 242 பேர் மரணமடைந்தள்ளனர். இந்த தகவலை குஜராத் மாநில சுகாதார துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 223 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்றிக்காயச்சல் மற்ற இடங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பரவுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். குஜராத்தில் அகமதாபாத், காந்தி நகர், வதோதரா உள்ளிட்ட இடங்களில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஜனவரி முதல் 2500 பேர் பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அவர்களில் 959 பேர் நோயில் இருந்து மீண்டுவிட்டதாகவும், 1299 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் குஜராத் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சூரத், ராஜ்கோட், வதோததரா உள்ளிட்ட இடங்களில் பன்றிக்காயச்சல் சிகிச்சை பெறுவோரை குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினார்.

மூலக்கதை