காஷ்மீரில் ஒருவரைக் கொன்றால் 10 பேர் எழுவோம்: மிர்வாஸ் உமர் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடும் ஒருவரை சுட்டுக் கொன்றதால் 10 பேர் எழுவார்கள் என்று பிரிவினைவாதி தலைவர் மிர்வாஸ் உமர் பாரூக் எச்சரித்துள்ளார். 57 நாட்கள் வீட்டு காவலில் இருந்த மிர்வாஸ் நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் கொல்லப் பட்டவர்களின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அங்கு திரண்டு இருந்த ஆயிரக் கணக்கானோர் மத்தியில் பேசிய மிர்வாஸ் காஷ்மீர் பிரச்சனைக்கு சுட்டுக் கொல்வது தீர்வாகாது என்று தெரிவித்துள்ளார். வாழ்வுரிமைக்காகவே காஷ்மீர் இளைஞர்கள் போராடி வருவதாக அவர் கூறியுள்ளார். தன்னெழுச்சியாக போராடும் இளைஞர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். கொல்வது காஷ்மீர் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும் என மிர்வாஸ் உமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே தமது சுயநலத்துக்காக மிர்வாஸ் போன்றவர்கள் காஷ்மீர் இளைஞர்களை தவறாக வழி நடுத்துவதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. ஐ.எஸ்.ஐ. யிடம் மிர்வாஸ் பணம் பெறுவதாக பா.ஜ.க. புகார் கூறியுள்ளது.

மூலக்கதை