ஜார்க்கண்டில் ஆம்புலன்ஸ் மறுப்பால் தாயின் மடியிலேயே உயிரிழந்த 3 வயது குழந்தை

தினகரன்  தினகரன்

கும்லா: ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா என்ற இடத்தில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட 3 வயது குழந்தை தாயின் மடியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு உடல்நிலை  சரியில்லை என்று அவரது தாய் மருத்துவமனைக்கு தொலைபேசியில் பேசியுள்ளார். உடல்நிலை மோசமாக உள்ளதால் உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பும்படி அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் வெகு நேரம் ஆகியும் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் அனுப்பவில்லை. இந்நிலையில் அந்த பெண் தனது குழந்தையை மடியில் வைத்து கொண்டு 40 கிமீ தொலைவில் உள்ள மருத்துவமனை நோக்கி நடக்க தொடங்கினார்.ஆனால் பாதி தொலைவில் சென்ற போது குழந்தை இறந்து விட்டது. இதனை கண்டு அவர் கதறி அழுதார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் வாடகை வேன் ஏற்பாடு செய்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜார்கண்ட், உத்திர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் பொதுமக்களுக்கு ஆம்புலன்ஸ் மறுப்பால் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை