ஸ்பெயின் தாக்குதலில் தொடர்புடைய வாகனம்! - பிரெஞ்சு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஸ்பெயின் தாக்குதலில் தொடர்புடைய வாகனம்!  பிரெஞ்சு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது!!

ஸ்பெயினில் இடம்பெற்ற இரட்டைதாக்குதலில் தொடர்புடைய வாகனம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை பிரெஞ்சு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
 
இடம்பெற்ற இரட்டைத் தாக்குதலில் 14 பேர்கள் கொல்லப்பட்டும், 100 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துமிருந்தனர். இதில் பிரான்சை சேர்ந்தவர்கள் 26 பேர் எனவும், அதில் 11 பேரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணைகளின் ஒரு பகுதியாக, தாக்குதலில் ஈடுபட்ட  white Kangoo வகை வாகனம் ஒன்று பிரெஞ்சு காவல்துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனம் பிரெஞ்சு நாட்டின் பதிவை கொண்டுள்ளது எனவும், பிரெஞ்சு-ஸ்பெயின் எல்லையை கடந்து வந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. 
 
குறித்த வாகனத்தை வாடகைக்குப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், வாகனத்தின் பதிவுகள், இதர புத்தகங்கள் அனைத்தும் பிரான்சை சேர்ந்தது என அறியமுடிகிறது. ஆனாலும் ஜோந்தாமினர்களின் விசாரணைகளின் பின்னரே இத்தகவல்கள் உறுதிசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை