காலி மனைகளுக்கு சொத்து வரி விதிக்கும் புதுடெல்லி நகராட்சியின் உபவிதிகள் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : காலி மனைகளுக்கு சொத்து வரி விதிக்க வகை செய்யும் புதுடெல்லி நகராட்சியின் 2009ம் ஆண்டின் உப விதிகள் செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காலி மனைகள், கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் போன்றவற்றுக்கு கட்டடங்களுக்கு இணையாக புதுடெல்லி நகராட்சி ெசாத்து வரி விதித்து வருகிறது. இது சட்ட விரோதமானது. இதை ரத்து செய்ய வேண்டும் என கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு தனி நபர்கள், பெருவர்த்தக நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கள் என தனிதனியாக 28 ரிட் மனுக்கள் செய்தன. இவை அனைத்தும் ஒன்றாக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.  நேற்று நீதிபதிகள் எஸ் முரளிதர், நீதிபதி பிரதீபா எம் சிங் ஆகியோர் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்ப வருமாறு: லுட்யன்ஸ் பங்களா மண்டல பகுதி கட்டுப்பாடுகள், இந்திய தொல்லியல் துறை விதிமுறைகள் காரணமாக கட்டுமானப் பணிகளுக்கு புதுடெல்லி நகராட்சி பகுதியில் தடைகள் உள்ளன.இந்த நிலையில், காலி மனைகள், கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு முடிவடையாத கட்டிடங்களுக்கும் கட்டப்பட்டவற்றுக்கு நிகரா சொத்து வரி விதிப்பது ஏற்கதக்கதல்ல. இது என்டிஎம்சி சட்டம் 388(1) ஏ(9)களுக்கு எதிரானது.  எனவே, இதை நீதிமன்றம் ரத்து செய்கிறது. இதையடுத்து, இந்த புதிய துணை விதிகளின் படி அது ேமற்கொண்ட சொத்து வரி மதிப்பீடு, வரி வசூல், அமல், வரி கேட்டு நோட்டீஸ் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது. இந்த புதிய துணை உபவிதிகளின் கீழ் அனுப்பு அனைத்து வரி கேட்பு நோட்டீஸ்களும் செல்லாது. அவை சட்ட பூர்வமானவை அல்ல. இடைக்கால உத்தரவின்படி, பெறப்பட்ட வரியை விட அதிகமாக வசூல் செய்யப்பட்ட டெபாசிட் திரும்ப தரப்பட வேண்டும். இவ்வாறு  40 பக்க தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மூலக்கதை