‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்

தினமலர்  தினமலர்
‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்: தேர்தல் கமிஷனர் ராவத்

புதுடில்லி: "தேர்தல் வெற்றிக்காக எதையும் செய்வது, அரசியலில் சாதாரணம்," என, தேர்தல் கமிஷனர், ஓம் பிரகாஷ் ராவத் கூறியுள்ளார்.

பிரச்னை:


சமீபத்தில், குஜராத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலின்போது, காங்கிரஸ் அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள் இருவர், தாங்கள் அளித்த ஓட்டு குறித்து, பா.ஜ., தலைவர்களிடம் காட்டியது பெரும் பிரச்னையானது. அவர்கள் ஓட்டு செல்லாது என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது.

சாதாரணம்:


இந்நிலையில், டில்லியில் நேற்று, தேர்தல் கமிஷனர், ஓம் பிரகாஷ் ராவத், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கூறியதாவது: தேர்தல், மிகவும் நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடக்கும்போதுதான், ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கும். நெறிமுறைகளின்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, அனைவரும் விரும்புகிறோம். ஆனால், எவ்வித கொள்கையும், நெறியும் இல்லாமல், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யலாம் என்பது, அரசியலில் தற்போது சாதாரணமாகிவிட்டது.

மக்கள் நம்பிக்கை:


தேர்தலில் வெற்றி பெற்றவர், எந்தத் தவறும் செய்யாதவர் என்றும், ஆளுங்கட்சிக்கு தாவுவதால், தான் செய்த தவறுகளை திருத்திக் கொண்டார், என்றும், மக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை தவறு என்பதை நிரூபிக்க வேண்டிய நிலை, அனைவருக்கும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை