இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நியமனம்

தினமலர்  தினமலர்
இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நியமனம்

மாஸ்கோ: இந்தியாவுக்கான ரஷ்ய தூதராக நிகோலாய் குடாஷெவ் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் டில்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் பொறுப்பேற்க உள்ளார். நிகோலாய் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தூதராக பணியாற்றி உள்ளார்.

கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கான ரஷ்ய தூதராக இருந்த அலெக்ஸாண்டர் கடாகின், உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் கடந்த 7 மாதங்களாக அப்பொறுப்பு காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை