திருப்பதியில் விஐபி டிக்கெட் மோசடி ஒருவர் கைது

தினகரன்  தினகரன்

திருமலை : தெலங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டம், பெத்தபல்லியை சேர்ந்தவர் ஹேமந்த் குமார். இவர், தனது குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் திருப்பதி வந்தார். இதற்கிடையில், விரைவாக தரிசனம் செய்யலாம் என்று கருதிய ஹேமந்த் குமார் இணை செயல் அலுவலகம் அருகே விஐபி தரிசன டிக்கெட் பெறுவதற்காக  சென்றார். அப்போது, அங்கிருந்த ஊழியர்கள்  சிபாரிசு கடிதம் உள்ளவர்களுக்கு உடனடியாக விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதை பார்த்துக் கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர், ஹேமந்த் குமாரிடம் வந்து, விஐபி  டிக்கெட் பெற்றுத் தருவதாவும், அதற்கு முன்பணமாக ₹20 ஆயிரம் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய ஹேமந்த் குமார், மர்ம நபரிடம் பணத்தை கொடுத்துள்ளார். அவர் விஐபி டிக்கெட் வாங்கி வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால்வரவில்லை. ஹேமந்த் குமார் தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்தார். அதன் பேரில், திருப்பதியை சேர்ந்த மத்திய சேகர் கைது செய்யப்பட்டார்.

மூலக்கதை