கடற்படை தளபதியாக இலங்கையில் தமிழர் நியமனம்

தினமலர்  தினமலர்
கடற்படை தளபதியாக இலங்கையில் தமிழர் நியமனம்

கொழும்பு: இலங்கை கடற்படை தளபதியாக, ரியர் அட்மிரல், டிராவிஸ் சின்னய்யா, நேற்று, நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த, 45 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்த இலங்கையில், சிறுபான்மையினரான தமிழர் ஒருவர், கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக, ரியர் அட்மிரல், டிராவிஸ் சின்னய்யாவை நியமிப்பதாக, அதிபர், மைத்ரிபால சிறீசேனா அறிவித்துள்ளார். இதுவரை, அப்பொறுப்பில் இருந்த, வைஸ் அட்மிரல், ரவி விஜயகுணரத்னே ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, நீண்ட அனுபவம் உள்ள சின்னய்யா நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த கடைசி கட்ட போரின்போது, விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் நிரம்பிய கப்பலை அழித்ததில், சின்னய்யாவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.கடந்த, 1960 -- 70ல், ராஜன் கதிர்காமர் என்ற தமிழர், கடற்படையின் தளபதியாக இருந்தார். 50 ஆண்டுக்கு பின், கடற்படை தளபதியாக, தமிழர் ஒருவர், தற்போது, மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை