ஆக்ஸ்போர்டில் படிக்க மலாலா உற்சாகம்

தினமலர்  தினமலர்
ஆக்ஸ்போர்டில் படிக்க மலாலா உற்சாகம்

பர்மிங்ஹாம்: பிரிட்டனின் புகழ்பெற்ற, ஆக்ஸ்போர்டு பல்கலையில், உயர் கல்விக்கு இடம் கிடைத்துள்ளதை, 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில், மலாலா உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அண்டை நாடான, பாகிஸ்தானை சேர்ந்த, மலாலா, பெண் கல்விக்கான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நோபல் பரிசு பெற்ற அவர், தற்போது, பிரிட்டனில், பர்மிங்காம் நகரில், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மலாலா, அங்குள்ள பள்ளியில், பள்ளிப் படிப்பை, சமீபத்தில் முடித்தார். தற்போது, 20 வயதாகும், மலாலாவுக்கு, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், உயர்படிப்புக்கான இடம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து, 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள மலாலா, 'சிறந்த மாணவர்கள் படிக்கும், உயர்தர பல்கலையில் இடம் கிடைத்திருப்பது உற்சாகத்தை அளிக்கிறது' என கூறியுள்ளார்.

மூலக்கதை