ஐந்து பயங்கரவாதிகள் ஸ்பெயினில் சுட்டுக் கொலை

தினமலர்  தினமலர்

பார்சிலோனா: ஸ்பெயினினில், நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய ஐந்து பயங்கரவாதிகளை, போலீசார் சுட்டுக் கொன்றனர்.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், பார்சிலோனா நகரில் உள்ள, லாஸ் ராம்பலாஸ் என்ற சுற்றுலா தலத்தில், நேற்றுமுன்தினம், மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். அப்போது, மக்கள் கூட்டத்துக்குள், வேன் ஒன்று புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். வேன் மோதியதில் 13 பேர் இறந்தனர். 100 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக, இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், பார்சிலோனா அருகே, பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அப்பகுதியை, நேற்று காலை, போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, போலீசாரை நோக்கி, பயங்கரவாதிகள் சுட்டனர். போலீசார் பதிலடி கொடுத்ததில், ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பார்சிலோனாவில் நடந்த வேன் தாக்குதலில், இவர்களுக்கு தொடர்பு உள்ளது என, போலீசார் தெரிவித்தனர்.

மூலக்கதை