உலகின் முதல் உயிரினம் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

தினமலர்  தினமலர்

மெல்போர்ன்: 'உலகின் முதல் உயிரினம், 65 கோடி ஆண்டுக்கு முன் தோன்றி இருக்கலாம்' என, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர்.
உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து, ஒன்றில் இருந்து ஒன்று தோன்றியதாக, முந்தைய அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன; அப்படியானால் முதல் உயிரினம்
எப்படி தோன்றி இருக்க முடியும் என்ற கேள்வி, நீண்டகாலமாக முன் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள், புதிய கண்டு பிடிப்பை வெளியிட்டுள்ளனர்; இதுகுறித்து, ஆஸ்திரேலிய தேசிய பல்கலைகழக பேராசிரியர், ஜோசன் புரூக்ஸ் கூறியதாவது: ஆஸ்திரேலியாவின் மத்திய பகுதியில் உள்ள பண்டைய பாறைகளை ஆய்வு செய்தோம்; அதை உடைத்து, துாள் தூளாக்கியதில், உயிரிழந்து மக்கிப்போன உயிரினங்களின் மூலக்கூறுகள் கிடைத்தன. இந்த மூலக்கூறுகள், 65 கோடி ஆண்டுகளுக்கு முந்தையவை; சூழ் நிலை இயல் வரலாற்றில் இது மிக முக்கியமான மாற்றம். அதற்கு முன், கடும் குளிரான பனிப்பாறையாகவே பூமி காட்சியளித்துள்ளது. இதன்பின், வெப்பத்தின் தாக்கம் உணரப்பட்டு, பனி உருகி, பூமியில் நீரோட்டம் ஏற்பட்டுள்ளது; ஆறுகள் உருவாகின,
தாவரங்கள் வளர்ந்தன; அதன் பின்னரே உயிரினங்கள் தோன்றின. இந்த சூழியியல் மாற்றத்தால், கடலில் பாசியும், அதில் இருந்து பாக்டீரியாவும் தோன்றி இருக்க கூடும். அதுவே, பிற உயிரினங்களாக பரிணமா வளர்ச்சி அடைய ஏதுவாக இருந்திருக்கும். எனவே, பூமியில் முதல்
உயிரினம் தோன்றியது, 65 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கலாம் என கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை