7 பேர் சுட்டு கொலை: ஐ.எஸ்., அட்டகாசம்

தினமலர்  தினமலர்

கிர்குக்: ஈராக்கில் 2014ம் ஆண்டிலிருந்து, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த மொசுல் நகரை அந்நாட்டு ராணுவம் சமீபத்தில் மீட்டது. இப்பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அச்சுறுத் தும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கிர்குக் நகர் அருகே வசிக்கும் போலீஸ் அதிகாரியின் வீட்டுக்குள், நேற்று அதிகாலை, பயங்கரவாதிகள் நுழைந்தனர். துப்பாக்கியால், பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டதில், போலீஸ் அதிகாரியின் 15 வயது மகன் உள்ளிட்ட ஏழு பேர் ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

மூலக்கதை