இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் ட்ராவிஸ் சின்னையா நியமணம்

தினகரன்  தினகரன்

கொழும்பு: இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அந்நாட்டு ஜனாதிபதி சிறிசேன பிறப்பித்துள்ளார். விடுதலை புலிகளுக்கு எதிரான போருக்கு பின்னர் 21 வது கடற்படை தளபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1982ல் கடற்படையில் சேர்ந்த சின்னையா, இங்கிலாந்து கடற்படை கல்லூரியில் பயிர்ச்சிப் பெற்றுள்ளார். இலங்கையின் கிழக்கு கடல் பிராந்தியத்தில் கமாண்டராக இவர் பணிபுரிந்துள்ளார். அவர் போரின் போது சிறப்பாக பணிபுரிந்ததற்காக பல விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வரும் 22ம் தேதியில் ஓய்வுபெறுவதை அடுத்து சின்னையா தளபதியாக நியமிக்கப்பட உள்ளார். 1982ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் சேர்ந்த அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, விடுதலைப் புலிகளுடனான போரில் அதிக அனுபவங்களைக் கொண்ட ஒரே மூத்த அதிகாரி ஆவார். கடந்த 2007-2008 ஆண்டில் விடுதலைப் புலிகளின் 10 ஆயுதக்கப்பல்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்ட தாக்குதல்களுக்கு சின்னையாவே தலைமை தாங்கியிருந்தார் என்பது அதிர்ச்சித் தகவல் ஆகும். 

மூலக்கதை