அதிமுகவின் இரு அணிகள் இணைவது குறித்து ஓபிஎஸ் இன்று மாலை முக்கிய அறிவிப்பு? சென்னையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிமுகவின் இரு அணிகள் இணைவது குறித்து ஓபிஎஸ் இன்று மாலை முக்கிய அறிவிப்பு? சென்னையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை

சென்னை: அதிமுகவின் இரு அணிகள் இணைவது குறித்து இன்று மாலை முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஓ. பி. எஸ். அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அதிமுக 2 ஆக உடைந்தது.

ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என செயல்பட்டு வந்தது. சசிகலா சிறை சென்றதை தொடர்ந்து, எடப்பாடி அணியாக மாறியது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலா குடும்பத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால், டி. டி. வி.

தினகரன் கடும் கோபத்தில் இருந்து வருகிறார். டிடிவி தினகரன் போர்கொடி தூக்கியதை அடுத்து ஓபிஎஸ் அணியை எடப்பாடி அணியுடன் இணைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

எடப்பாடி அணியில் இணைய ஓபிஎஸ் அணி 2 நிபந்தனைகளை விதித்தது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும், சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்  என்றனர். ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை ஏற்று டி. டி. வி. தினகரன், சசிகலா நியமனம் செல்லாது என்று அண்மையில் எடப்பாடி அணி அறிவித்தது.

மேலும் ஒரு நிபந்தனையான ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி நேற்று அதிரடியாக அறிவித்தார். அதோடு, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்தை நினைவில்லமாகவும் அறிவித்தது.

இதற்கு ஓ. பி. எஸ். அணியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஓ. பி. எஸ். தர்ம யுத்தத்திற்கு கிடைத்த வெற்றி இது என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், ஓ. பி. எஸ். அணியில் உள்ள கே. பி. முனுசாமி சி. பி. ஐ.

விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், எடப்பாடியின் முடிவை வரவேற்பதாக மா. பா. பாண்டியராஜன், மதுசூதனன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.



இதனால், ஓ. பி. எஸ். அணியில் ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இருந்த போதிலும் இரு அணிகளும் இணைவது என்பது கிட்டத்தட்ட முடிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ. பி. எஸ்.

இல்லத்தில் இன்று மாலை 5 மணியளவில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு மாநிலம் முழுவதிலும் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்களுக்கு ஓ. பி. எஸ்.

அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து கட்சி நிர்வாகிகள் சென்னை வந்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் முதல்வரின் அறிவிப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் இணைவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இரு அணிகள் இணைப்பு விஷயத்தில் பாஜ தலையீடு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், பாஜ தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வருவதற்கு முன்பாக இரு அணிகளும் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமித்ஷா வருகிற 22ம் தேதி தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை ஓ. பி. எஸ்.

அளித்த பேட்டியில், “ அதிமுகவின் இரு அணிகள் இணைவது குறித்து இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும். பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.

3 பேருக்கு அமைச்சர் பதவி: ஓ. பி. எஸ். சுக்கு நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி, அவரது அணியை சேர்ந்த செம்மலை, மா. பா. பாண்டியராஜன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்புள்ளது.

மேலும், இரு அணியினர் இணைந்த பிறகு, ஒட்டுமொத்தமாக கட்சியின் பெயர், சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் வழங்க உள்ளனர். அப்போது, தேர்தல் ஆணையமும் மெஜாரிட்டி அடிப்படையில், எடப்பாடி, ஓபிஎஸ் அணியினருக்கு கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை வழங்கும் என்று கூறப்படுகிறது.



அதன்பின்னர் கட்சியில் பன்னீர்செல்வம் பொருளாளராகவும், மதுசூதனன் அவைத்தலைவராகவும் இருப்பார். எடப்பாடி பழனிச்சாமி தலைமை நிலைய செயலாளராக இருப்பார்.

அதேநேரத்தில், ஜெயலலிதா ஏற்கனவே 5பேர் குழுவை அமைத்தார். அந்த குழுவுக்கு மீண்டும் உயிரூட்டப்படும்.

அந்தக்குழுதான் கட்சியை வழிநடத்தும். அந்தக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், கே. பி. முனுசாமி, வைத்திலிங்கம், வேலுமணி ஆகியோர் இருப்பார்கள்.

இதுதான் சமமான குழுவாக இருக்கும். இவர்கள்தான் கட்சியை வழிநடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் ஓபிஎஸ் அணிகள் இணைவதற்கு கே. பி. முனுசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் அவரை ஓ. பன்னீர்செல்வம் சமாதானப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

.

மூலக்கதை