ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது: ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது: ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை

நெல்லை: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உ்ள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என தமிழகம் முழுவதும் 75 சங்கங்களை உள்ளடக்கிய ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு போராட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த 5ம் தேதி சென்னையில் ஆ்ர்ப்பாட்டம் நடத்தினர்.

அடுத்த கட்டமாக வருகிற 22ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அனைத்துத்துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு பிறப்பித்துள்ள அவசர உத்தரவில் கூறியிருப்பதாவது:

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் ஆக. 22ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த வேலை நிறுத்தம் அன்று பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது. பகுதி நேர ஊழியர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 22ம் தேதி அன்று மருத்துவ விடுமுறை தவிர தற்காலிக விடுமுறை உட்பட எந்த விடுமுறையும் அளிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசின் மிரட்டல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை