ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு

PARIS TAMIL  PARIS TAMIL
ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு

ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று பார்சிலோனா. இந்நகரின் மையப்பகுதியில் உள்ள லாஸ் ராம்பலாஸ் என்ற சுற்றுலா தலத்தில் மக்கள் நேற்று அதிக அளவில் கூடி இருந்தனர்.இந்நிலையில் திடீரென மக்கள் கூட்டத்தில் வேன் ஒன்று புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். எனினும் வேன் மோதியதில் 13 பேர் இறந்தனர். 100 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. வாகன தாக்குதல் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், வேனை ஓட்டிவந்தவன் பிடிபடவில்லை. இந்த தாக்குதலை அடுத்து நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பார்சிலோனாவின் அருகே உள்ள காம்ப்ரில்ஸ் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த பகுதியை முற்றுகையிட்ட போலீசார், அவர்களை நோக்கி சரமாரியான துப்பாக்கிச்சூட்டை நடத்தினர். சில மணிநேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 1 பயங்கரவாதி காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பார்சிலோனா நகரில் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும், காம்ப்ரில்ஸ் நகரில் இரண்டாவது தாக்குதலுக்கு அவர்கள் திட்டமிட்டு இருந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சண்டையின் போது 9 பொதுமக்கள் மற்றும் ஒரு போலீசார் காயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மூலக்கதை