காவல்துறையினர் விசாரணைகளின் பின் உயிரிழந்த நபர்! - உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
காவல்துறையினர் விசாரணைகளின் பின் உயிரிழந்த நபர்!  உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!!

காவல்துறையினரின் விசாரணையின் பின்னர் உயிரிழந்த 34 வயதுடைய நபர் தொடர்பாக உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
Essonne மாவட்டத்தின் Arpajon நகரில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஜூலை 3 ஆம் திகதி Lucas M எனும் 34 வயதுடைய நபரை காவல்துறையினர் கைதுசெய்தனர். அதன் பின்னர்  அதே நகரில் உள்ள காவல்நிலையத்தில்  காவல்துறையினர் விசாரணைக்குட்படுத்தி வந்தனர். விசாரணைகள் இடம்பெற்ற ஐந்தாவது நாள் குறித்த நபர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் அவரின் உறவினர்கள், காவல்நிலையத்தில் நடந்து என்ன என்பது தொடர்பாக அறிய தொடர்ச்சியாக முயற்சித்து வந்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
90 கிலோமீட்டர்கள் வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட சாலையில், மணிக்கு 155 கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டு இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆனால் விசாரணைகளின் பின்னர் உயிரிழக்க காரணம் காவல்துறையினர் தான் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மூலக்கதை