16 வயது சிறுமியுடன் திருமணம் : 65 வயது ஓமன் ஷேக் அடாவடி

தினமலர்  தினமலர்
16 வயது சிறுமியுடன் திருமணம் : 65 வயது ஓமன் ஷேக் அடாவடி

ஐதராபாத்: ஓமன் நாட்டைச் சேர்ந்த, ஷேக் அஹமது, 65, ஐதராபாத்தைச் சேர்ந்த, 16 வயது சிறுமியை, சட்ட விரோதமாக திருமணம் செய்து அழைத்துச் சென்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சிறுமியை மீட்டு தரக்கோரி, அவரது தாயார், ஐதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே, நவாப் சாஹிப் குந்தா பகுதியைச் சேர்ந்தவர், சையதா
உன்னிசா.
அவரது உறவினர்களான, கோஷியா, சிக்கந்தர் ஆகிய இருவரும் சேர்ந்து, உன்னிசாவின், 16 வயது மகளை, அரபு நாடான, ஓமனைச் சேர்ந்த, ஷேக் அஹமதுவுக்கு, சட்ட விரோதமாக திருமணம் செய்து வைத்தனர்.
ஐதராபாத் வந்த, அஹமது, இங்குள்ள ஓட்டலில் திருமணம் செய்துள்ளார்; இதற்காக, உன்னிசாவின் உறவினர்களுக்கு, அஹமது, ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளார்.
திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த உன்னி சாவை, உறவினர்கள்
இருவரும் மிரட்டி
உள்ளனர்.
அந்த சிறுமியிடம், 'சொகுசாக வாழலாம்' என, ஆசை வார்த்தை கூறியுள்ளனர். திருமணத்திற்கு பின், ஓமன் தலைநகர், மஸ்கட்டிற்கு, அந்த சிறுமியை, அஹமது அழைத்துச் சென்று விட்டார்.
பல நாட்களாக, தன் மகளை பற்றிய எந்த தகவலும் இல்லாத நிலையில், தாய் உன்னிசா, ஐதராபாத் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்; மகளை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளார்.

மூலக்கதை