வர்த்தக கவுன்சில் கலைப்பு : அதிகாரிகளுக்கு டிரம்ப் பதிலடி

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: அமெரிக்காவில், அரசு வர்த்தக ஆலோசனை கவுன்சிலில் இருந்து, தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் சிலர் பதவி விலகியதால், ஆத்திரமடைந்த, அதிபர் டொனால்டு டிரம்ப், அந்த கவுன்சில்களை கலைத்து, நேற்று உத்தரவிட்டார்.அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம்,சர்லோட்டஸ்வில்லேநகரில் நடந்த ஊர்வலத்தில், இரு தரப்பினர் இடையே போராட்டம் வெடித்தது; பெண்ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'இனவெறி ஆதரவாளர்கள் மட்டுமின்றி, எதிர்ப்பாளர்களும், கலவரத்திற்கு காரணம்' என்றார்.இனவெறிக்கு ஆதரவாக, டிரம்ப் பேசியதாக கூறி, அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழில் நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ள, சி.இ.ஓ., என, அழைக்கப்படும் தலைமை செயல் அதிகாரிகள் சிலர், அரசின் வர்த்தக ஆலோசனை கவுன்சிலில் இருந்து விலகினர்.இதனால் கடும் கோபமடைந்துள்ள டிரம்ப், அமெரிக்காவின், உற்பத்தி ஆலோசனை கவுன்சில், கொள்கை மற்றும் செயல் திட்ட கவுன்சில் ஆகிய இரண்டையும் கலைத்து, நேற்று உத்தரவிட்டார். இந்த இரு கவுன்சிலும், அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் புதிதாக அமைக்கப்பட்டவை.
பெப்ஸி, ஜெனரல் மோட்டார்ஸ், வால்மார்ட் உட்பட அமெரிக்காவின், 16 முன்னணி நிறுவனங்
களின், சி.இ.ஓ.,க்கள், இந்த கவுன்சிலில் இடம் பெற்றிருந்தனர்.

மூலக்கதை