கதிராமங்கலத்தில் கைதானவர்களின் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கதிராமங்கலத்தில் கைதானவர்களின் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

திருவிடைமருதூர்: தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் எண்ணெய் எடுப்பதை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று  36வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் நேற்று  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: 17 ஆண்டுகளுக்கு முன் கதிராமங்கலத்தில் எண்ணெய் நிறுவனம் ஆய்வு பணிகள் துவங்கும்போது மக்கள் அனுமதி அளித்துள்ளனர்.

தற்போது குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கசிந்து நிலத்தடி நீர்மட்டம் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட 10 பேர் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

கதிராமங்கலத்தில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை தமிழக தரசு வலியுறுத்த வேண்டும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கலாம். மக்களுக்காக தான் திட்டங்கள்.

மக்கள் ஏற்று கொண்டால் தான் அதை செயல்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி மக்களுக்கு துணையாக இருக்கும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். இன்று 37வது நாளாக கதிராமங்கலத்தில் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.

இன்றும் ஏராளமான மக்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

.

மூலக்கதை