இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வரலாற்றை மாற்றி எழுதுங்கள்: வெ.இ., வீரர்களுக்கு பயிற்சியாளர் வேண்டுகோள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வரலாற்றை மாற்றி எழுதுங்கள்: வெ.இ., வீரர்களுக்கு பயிற்சியாளர் வேண்டுகோள்

பர்மிங்ஹாம்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், ஒரே ஒரு டி20, 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

இதன் முதல் டெஸ்ட் பர்மிங்ஹாமில், இந்திய நேரப்படி இன்று மாலை 6. 30 மணிக்கு தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்/இரவாக நடத்தப்படுவதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வலுவான இங்கிலாந்து அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் சவால் அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா கூறுகையில், ‘’இங்கிலாந்து அணியின் குறைகளை வெஸ்ட் இண்டீஸ் கண்டறிய வேண்டும்.

இங்கிலாந்தின் பலவீனங்களை பயன்படுத்தி கொண்டு விளையாட வேண்டும்.

வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்’’ என கூறியுள்ளார்.

.

மூலக்கதை