அ.தி.மு.க அரசு நீடிக்குமா, ஓபிஎஸ்-ஈபிஎஸில் யார் சிறந்தவர் கருத்து கணிப்பு முடிவுகள்

PARIS TAMIL  PARIS TAMIL
அ.தி.மு.க அரசு நீடிக்குமா, ஓபிஎஸ்ஈபிஎஸில் யார் சிறந்தவர் கருத்து கணிப்பு முடிவுகள்

அ.தி.மு.க. ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் இரு பிரிவாக செயல்பட்டு வந்தது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி  அணியில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தனியாக செயல்படத் தொடங்கினார்கள். என்றாலும்  எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில்  எடப்பாடி அணியும் ஒ.பன்னீர் செல்வம் அணியும் இணைய நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. எடப்பாடி அணிக்கு தினகரன் எச்சரிக்கை விடுத்து வருகிறார். இதனால் எடப்பாடி அரசுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில் தந்தி டிவி சார்பில்  தற்போதைய அரசு தாக்கு பிடிக்க காரணம்...? அரசும், அமைச்சரவையும் எடப்பாடியின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறதா...? முதலமைச்சராக எடப்பாடி-யின் செயல்பாடு...?  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு எப்படி...? ஆட்சி காலத்தை எடப்பாடி அரசு நிறைவு செய்யுமா...? எடப்பாடியால் அதிமுக-வை வழி நடத்த முடியுமா...?  ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். ஒப்பீடு.  என பல்வேறு கேள்விகளுக்கு வாசகர்களிடையே  கருத்து கணிப்பு நடத்தபட்டது. அதன் முடிவுகள் வருமாறு:-

தற்போதைய அரசு தாக்கு பிடிக்க காரணம்...? என்ற கேள்விக்கு 58 சதவீதம் பேர் பாரதீயஜனதாவின் தலையீடு என்றும், தேர்தலிக்கு தயாரில்லை என 26 சதவீதம் பேரும்,  எடப்பாடியின் தலைமை என 9 சதவீத பேரும், அதிமுக- திமுக புரிதலே என 7 சதவீதம் பேரும் பதில் அளித்து உள்ளனர்.

அரசும், அமைச்சரவையும் எடப்பாடியின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறதா...? என்ற கேள்விக்கு  இல்லை என 75 சதவீதம் பேரும், ஆம் என 19 சதவீதம் பேரும்,
கருத்து இல்லை என6 சதவீதம் பேரும் பதில் அளித்து உள்ளனர்.

முதல் அமைச்சராக எடப்பாடியின் செயல்பாடு எப்படி உள்ளது..? என்ற கேள்விக்கு  எதிர்பார்த்ததைவிட மோசம் என 76 சதவீதம் பேரும், சிறப்பு என 14 சதவீதம் பேரும், கருத்து இல்லை என 10 சதவீதம் பேரும்  கூறி உள்ளனர்.

முதல் அமைச்சர் எடப்பாடியின் செயல்பாடு எப்படி..? என்ற கேள்விக்கு சரியில்லை என 36 சதவீதம் பேரும் ,சராசரி என 34 சதவீதம் பேரும், மோசம் என 20 சதவீதம் பேரும், நன்று என 9 சதவீதம் பேரும், மிக நன்று என 1 சதவீதம் பேரும் பதில் அளித்து உள்ளனர்.

ஆட்சி காலத்தை எடப்பாடி அரசு நிறைவு செய்யுமா ..? என்ற கேள்விக்கு  செய்யாது என 74 சதவீதம் பேரும்,  செய்யும் என 14 சதவீதம் பேரும், கருத்து இல்லை என 9 சதவீதம் பேரும் பதில் அளித்து உள்ளனர்.

எடப்பாடியால் அ.தி.மு.கவை வழிநடத்த முடியுமா..? என்ற கேள்விக்கு முடியாது என 77 சதவீதம் பேரும்,  முடியும் என 13 சதவீதம் பேரும், கருத்து இல்லை என 10 சதவீதம் பேரும் பதில் அளித்து உள்ளனர்.

ஓ.பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஒப்பீடு...? குறித்த கேள்விக்கு ஒபிஎஸ் சிறந்தவர் என 47 சதவீதம் பேரும், இருவரும் ஒரே மாதிரி என 38 சதவீதம் பேரும், ஈபிஎஸ் சிறந்தவர் என 9 சதவீதம் பேரும், கருத்து இல்லை என 6 சதவீதம் பேரும் பதில் அளித்து உள்ளனர்.

மூலக்கதை