மக்ரோன் தொடுத்த வழக்கிற்கு எதிராக - ஒன்றிணைந்த ஊடகவியலாளர்கள் சங்கம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
மக்ரோன் தொடுத்த வழக்கிற்கு எதிராக  ஒன்றிணைந்த ஊடகவியலாளர்கள் சங்கம்!!

விடுமுறையின் போது புகைப்படக்கலைஞர்கள் பின் தொடர்கிறார்கள் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வழக்கு பதிவு செய்திருந்தமை வாசகர்கள் அறிந்ததே. அதன் பின்னர் புகைப்படக்கலைஞர் ஒருவர் 6 மணி நேர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். தற்போது, மக்ரோன் தொடுத்த வழக்கை திரும்பப் பெறும்படி ஊடகவியலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
 
மக்ரோன் பதிவு செய்திருந்த வழக்கில் 'துன்புறுத்தல்' என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த SNJ-CGT  சங்க நிர்வாகிகள், 'உண்மையில் இது புகைப்படக்கலைஞருக்கு மிக சவாலான விடயம். ஜனாதிபதியை பொது இடங்களில் பார்ப்பதோ, புகைப்பட எடுப்பதோ அத்தனை எளிதல்ல. இதில் துன்புறுத்தல் என்று எதுவும் இல்லை. மக்ரோன் பதிவு செய்த வழக்கு பொருத்தமற்றது. இதனை மக்ரோன் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்!' என குறிப்பிட்டுள்ளனர். 
 
மேலும், ஊடகவியலாளர் சங்கம் தெரிவிக்கும் போது, 'புகைப்படக்கலைஞர் கைதுசெய்யப்பட்டு சில மணிநேரங்களுக்குள்ளாக, ஜனாதிபதி உதைப்பந்தாட வீரர்கள் உள்ளிட்ட பல புகைப்படங்களுக்கு முகம் கொடுத்துள்ளார்!' என்பதையும் அவர்கள் மறக்காமல் பதிவு செய்தனர்.

மூலக்கதை