‛வந்தே மாதரம் பாட மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாரா?'

தினமலர்  தினமலர்
‛வந்தே மாதரம் பாட மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாரா?

மும்பை: வந்தே மாதரம் பாட மறுப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு தயாரா? என சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு:


மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ள சிவசேனா கட்சி, தனது கட்சி இதழான 'சாம்னா'வில் கூறியுள்ளதாவது: காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, சிறப்பு அந்தஸ்து 370-ஐ நீக்க வேண்டும். இதற்கு காஷ்மீர் மக்கள் ஆதரவு அளிப்பர். பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் செயல்படுபவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மென்மை போக்கு ஏன்?


செல்லாத ரூபாய் நோட்டு திட்டம், ஜி.எஸ்.டி., போன்ற விஷயங்களில் எல்லாம், கடுமையான நடவடிக்கைகளை எடுத்த மத்திய அரசு, வந்தே மாதரம் பாட மறுப்பவர்கள் விஷயத்தில் மட்டும், மென்மையாக நடந்து கொள்வது ஏன்? வந்தே மாதரம் பாட மறுப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு தயாரா?

இரு ஆண்டுகளில்...


வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணம் மீட்கப்பட்டு, நாட்டிலுள்ள ஒவ்வொரு மக்களின் வங்கி கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் போடப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அடுத்த இரு ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை