செல்போன்களில் பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய அரசு அச்சம்

தினமலர்  தினமலர்
செல்போன்களில் பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய அரசு அச்சம்

புதுடில்லி: சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் செல்போன்களில் பயன்பாட்டாளர்களின் தகவல்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த அச்சத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாக ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகமாகி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்டர் போன்களில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் குறித்த பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கமளிக்க மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியா சீனாவிடையே நடக்கும் டோக்லாம் விவகாரத்தால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தகவல் தொழிற்நுட்பட பொருட்களை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து செல்போன் நிறுவனங்களுக்கும், செல்போன்களில் வாடிக்கையாளர்களின் தகவல்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்குமாறு மத்திய அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை