கோஹ்லியின் கேப்டன்சி ஸ்டைல் ரிக்கி பாண்டிங்போல் உள்ளது: மைக் ஹஸ்ஸி பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோஹ்லியின் கேப்டன்சி ஸ்டைல் ரிக்கி பாண்டிங்போல் உள்ளது: மைக் ஹஸ்ஸி பாராட்டு

மும்பை: விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி வெற்றிகளை குவித்து வருகிறது. சமீபத்தில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.

இதனால் விராட் கோஹ்லியை, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து மைக் ஹஸ்ஸி கூறுகையில், ‘’விராட் கோஹ்லி மிகுந்த புத்திசாலி.

இந்திய அணியை அவர் வழிநடத்தும் விதத்தை நான் விரும்புகிறேன். அவரது ஆக்ரோஷமான இயல்பு மற்றும் வெற்றி பெற வேண்டும் என்கிற விடாமுயற்சி ஆகியவையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.



தன்னால் முடிந்த வரை இந்திய அணியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்கிற ஆசை அவருக்கு உள்ளது. விராட் கோஹ்லியின் கேப்டன்சி ஸ்டைல் ரிக்கி பாண்டிங்கை (ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்) போலவே உள்ளது.

ஆஸ்திரேலிய அணி விரைவில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நிர்ணயிக்கப்பட்ட ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும்.

இலங்கையை டெஸ்ட் தொடரில் 3-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளதால் இந்திய அணியின் நம்பிக்கை உச்சத்தை தொட்டிருக்கும்.

இந்தியாவின் ஒரு நாள் அணியும் சிறப்பாகவே உள்ளது என்றாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் வித்தியாசமானது.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் திறமைசாலிதான். போட்டியை அவர் நன்றாக புரிந்து கொள்கிறார்’’ என்றார்.


.

மூலக்கதை