துருக்கி சிறையில் பிரெஞ்சு ஊடகவியலாளர்! - நடவடிக்கையில் இறங்கிய மக்ரோன்

PARIS TAMIL  PARIS TAMIL
துருக்கி சிறையில் பிரெஞ்சு ஊடகவியலாளர்!  நடவடிக்கையில் இறங்கிய மக்ரோன்

Loup Bureau எனும் பிரெஞ்சு ஊடகவியலாளர் கடந்த 20 நாட்களாக துருக்கியில் சிறைவைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்கக்கோரி ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் துருக்கிய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிரபல பிரெஞ்சு தொலைக்காட்சி ஒன்றுக்கான ஆவணப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வரும் Loup Bureau எனும் 27 வயதுடைய ஊடகவியலாளர், துருக்கிய காவல்துறையினரால்  கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பான செய்தியினை முன்னதாக வழங்கியிருந்தோம். இந்நிலையில் அவரை உடனடியாக விடுவிக்கக்கோரி நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், துருக்கிய ஜனாதிபதியுடன் உரையாற்றியதாகவும், அடுத்த வாரத்தில் அவர் நாடு திரும்புவார் எனவும் எலிசே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த ஊடகவியலாளரின் தந்தை, மகனை விடுவிக்க தொடர்ச்சியாக பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அரசு இந்த விஷயத்தில் பொறுப்புடன் நடக்கவில்லை எனவும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை