Nantes - தடைப்பட்ட பேருந்து, ட்ராம் சேவைகள்! - சாரதிகள் ஆர்ப்பாட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
Nantes  தடைப்பட்ட பேருந்து, ட்ராம் சேவைகள்!  சாரதிகள் ஆர்ப்பாட்டம்!!

இன்று திங்கட்கிழமை Nantes நகரில் பேரூந்து மற்றும் ட்ராம் சேவைகள் அனைத்தும் முற்றாக தடைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அப்பகுதிகளில் தொடர்ச்சியாக பொது போக்குவரத்து சேவைகள் தாக்குதலுக்கு இலக்காவதாக தெரிவிக்கப்பட்டு, அதன் சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதால் இன்று அப்பகுதியில் பெரும் போக்குவரத்து தடை ஏற்பட்டது.   இந்த கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் பேரூந்துகள் மற்றும் ட்ராம்கள் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களில் ஒரு பேருந்தும் ட்ராமும் மிக மோசமான தாக்குதலுக்கு உள்ளானது. 
 
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கும் போதும், 'Nantes ஒன்றும் சிறிய நகரம் இல்லை. இப்போது மாநகரமாகவும் பல மக்கள் புழக்கம் அதிகம் கொண்ட நகரமாகவும் இருக்கிறது. அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவேண்டும். இது போன்ற தாக்குதலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்!' என தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை