இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் : இந்தியா ஒயிட்வாஷ் வெற்றி பெற்று அசத்தல்

தினகரன்  தினகரன்

கண்டி: இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கையை வீழ்த்தி ஒயிட் வாஷ் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. கண்டியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும், இலங்கையை வீழ்த்தியது இந்தியா. இப்போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக முதல் இன்னிங்சில் இந்தியா 487 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. பாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.  முதல் இன்னிங்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மூலக்கதை