குல்தீப் சுழலில் மூழ்கியது இலங்கை பாலோ ஆன் பெற்று திணறல்: ஹர்திக் அசத்தல் சதம்

தினகரன்  தினகரன்

பல்லெகெலே: இந்திய அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் 135 ரன்னுக்கு சுருண்ட இலங்கை அணி பாலோ  ஆன் பெற்று தோல்வியின் பிடியில் சிக்கியது.பல்லெகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 6  விக்கெட் இழப்புக்கு 329 ரன் எடுத்திருந்தது. ராகுல் 85, தவான் 119, கேப்டன் கோஹ்லி 42,  அஷ்வின் 31 ரன் எடுத்தனர்.விருத்திமான் சாஹா 13, ஹர்திக் பாண்டியா 1 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சாஹா 16 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.  குல்தீப் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியாக விளையாடி இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்த பாண்டியா 86 பந்தில் சதம் விளாசி  அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அடித்த முதல் சதம் இது.குல்தீப் 26, ஷமி 8 ரன்னில் வெளியேற, ஹர்திக் 108 ரன் விளாசி (96 பந்து, 8 பவுண்டரி, 7 சிக்சர்) சந்தகன் பந்துவீச்சில் பெரேரா வசம் பிடிபட்டார்.  இந்தியா முதல் இன்னிங்சில் 487 ரன் குவித்து ஆல் அவுட்டானது (122.3 ஓவர்). உமேஷ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை  பந்துவீச்சில் சந்தகன் 5, புஷ்பகுமாரா 3, பெர்னாண்டோ 2 விக்கெட் வீழ்த்தினர்அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. குறிப்பாக, இளம்  சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் துல்லியமாகப் பந்துவீசி அசத்தினார். இலங்கை அணி 37.4 ஓவர் மட்டுமே தாக்குப் பிடித்து 135 ரன்னுக்கு ஆல்  அவுட்டானது. கேப்டன் சண்டிமால் அதிகபட்சமாக 48 ரன் (87 பந்து, 6 பவுண்டரி), குசால் 18, டிக்வெல்லா 29, புஷ்பகுமாரா, சந்தகன் தலா 10 ரன்  எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் திரும்பினர்.இந்திய பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4, ஷமி, அஷ்வின் தலா 2, ஹர்திக் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 352 ரன் பின்தங்கிய நிலையில்  பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 19 ரன் எடுத்து  திணறி வருகிறது. தரங்கா 7 ரன் எடுத்து உமேஷ் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். கருணரத்னே 12, புஷ்பகுமாரா (0) களத்தில் உள்ளனர். கை வசம் 9 விக்கெட் இருக்க, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 333 ரன் தேவை என்ற கடும் நெருக்கடியுடன் இலங்கை அணி இன்று  சவாலான 3வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

மூலக்கதை