ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் அரை இறுதியில் வோஸ்னியாக்கி

தினகரன்  தினகரன்

டொரான்டோ : ரோஜர்ஸ் கோப்பை மகளிர் டென்னிஸ் போட்டித் தொடரின் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி தகுதி பெற்றார். கனடாவில் நடக்கும் இந்த தொடரின் கால் இறுதியில் நம்பர் 1 வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவுடன் (செக்.) மோதிய வோஸ்னியாக்கி (6வது ரேங்க்) 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த பிளிஸ்கோவா, டைபிரேக்கரில் 7-6 (7-3) என வென்று சமநிலை ஏற்படுத்தினார். கடைசி செட்டில் பிளிஸ்கோவாவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த வோஸ்னியாக்கி 7-5, 6-7 (3-7), 6-4 என்ற கணக்கில் போராடி வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 58 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு கால் இறுதியில் அமெரிக்காவின் ஸ்லோனி ஸ்டீபன்ஸ் 6-2, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் லூசி சபரோவாவை (செக்.) வீழ்த்தினார். மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட ரோஜர் பெடரர் (சுவிஸ்), டெனிஸ் ஷபோவலாவ் (கனடா), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), ராபின் ஹாஸ் (நெதர்லாந்து) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

மூலக்கதை