தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

தினகரன்  தினகரன்

கேப்டன்: தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரஸ்ஸல் டோமிங்கோ அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். புதிய பயிற்சியாளராக வெ.இண்டீஸ் மாஜி வீரர் ஓடிஸ் கிப்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் 5பேர் கொண்ட குழு, கிப்சனை (49) தேர்வு செய்து அறிவித்துள்ளது. ஆல்ரவுண்டரான கிப்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்கிறார். தற்போது இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக கிப்சன் உள்ளார். செப்டம்பர் மாதம் தென்ஆப்ரிக்க அணி வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட்டில் ஆட உள்ளது. அப்போது கிப்சன் தென்ஆப்ரிக்க தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க உள்ளார்.

மூலக்கதை