ஹாக்கியில் பெல்ஜியத்திடம் இந்தியா தோல்வி

தினகரன்  தினகரன்

பூம் : ஐரோப்பிய சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய ஹாக்கி அணி, பெல்ஜியம், நெதர்லாந்து அணிகளுடன் தலா 2 போட்டியிலும், ஆஸ்திரியா அணியுடன் ஒரு போட்டியிலும் மோதுகிறது. இதில், பெல்ஜியம் அணிக்கு எதிரான முதல் போட்டி, பெல்ஜியத்தின் பூம் நகரில் நேற்று முன்தினம் நடந்தது. ஜேஷ் காயம் காரணமாக இத்தொடரில் மன்பிரீத் சிங் கேப்டன் பொறுப்பேற்றுள்ளார். மேலும், அறிமுக வீரர்கள் 6 பேர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இளம் இந்திய அணி, பெல்ஜியத்துக்கு எதிராக கடுமையாக போராடியது. ஆனாலும், இறுதியில் பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மூலக்கதை