பிபா தரவரிசை 97வது இடத்தில் இந்தியா

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) தரவரிசையில் இந்திய அணி ஒரு இடம் பின்தங்கி 97வது இடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பிபா தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இம்மாத பட்டியலில் இந்திய அணி ஒரு இடம் பின்தங்கி 97வது இடத்தில் உள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்திய அணி எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டின் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. பிரேசில் 1604 புள்ளிகளுடன் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளது. ஜெர்மனி 1549 புள்ளியுடன் 2வது இடத்திலும், அர்ஜென்டினா 1399 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.

மூலக்கதை