உலக தரவரிசையில் முதலிடம்; ரபேல் நடாலுக்கு வாய்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக தரவரிசையில் முதலிடம்; ரபேல் நடாலுக்கு வாய்ப்பு

மான்ட்ரியல்: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் கனடாவில் நேற்று தொடங்கியது. மான்ட்ரியல், டொரான்டோ உள்ளிட்ட இடங்களில் வரும் 13ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.

இதில், அரையிறுதிக்கு முன்னேறினால், ஏடிபி உலக தரவரிசையில், கடந்த மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக, ரபேல் நடால் முதலிடத்தை பிடிப்பார். 31 வயதாகும் ரபேல் நடால் ஸ்பெயினை சேர்ந்தவர்.

தற்போதைய உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே காயம் காரணமாக ரோஜர்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ரபேல் நடால் கூறுகையில், ‘’அதைப்பற்றி நான் இப்போது நினைக்கவில்லை.

போட்டிக்காக சரியான முறையில் தயாராகி வருகிறேன். அவ்வளவுதான்’’ என்றார்.


.

மூலக்கதை