11 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் : உங்களது பான் கார்டின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமா?

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
11 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் : உங்களது பான் கார்டின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமா?

சமீபத்தில் சுமார் 11 லட்சம் பான் கார்டுகளை முடக்கியுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. "பான் கார்டு(PAN Card) என்பது வரி விதிப்பில் மிக முக்கியமான ஒன்றாகவும், ஒரு நபர் மேற்கொள்ளும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளை ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு ஒதுக்கீடு என்பது வழிகாட்டி கொள்கை. ஆனால், ஒரே நபருக்கு ஏராளமான பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஜூலை 27-ம் தேதி கணக்கீட்டின் படி, உயிருடன் இல்லாத நபர் அல்லது பொய்யான அடையாளம் கொண்டவர்களின் பெயர்களில் 1,566 பேருக்குப் போலி பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவை அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இதுபோல, ஒட்டுமொத்தமாக 11,44,211 பான் கார்டுகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உங்களது பான் கார்டு செயல்பாட்டில்தான் உள்ளதா என்பதை அறிய https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourPanLinkGS.html என்ற இணைய முகவரிக்கு சென்று அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பி உறுதி செய்துக்கொள்ளலாம்.

மூலக்கதை