ஓய்வு பெற தயாராகும் உசேன் போல்ட்!

PARIS TAMIL  PARIS TAMIL
ஓய்வு பெற தயாராகும் உசேன் போல்ட்!

ஜமைக்காவின் உசைன் போல்ட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெறுவதில் தாம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
லண்டனில் தடகள சர்வதேச கூட்டமைப்புகளின் சங்கம் சார்பில் நாளை மறுதினம் நடைபெற உள்ள 100 மீட்டர்  ஓட்டப்பந்தயத்தில், உலகின் மிக வேகமான ஓட்டப் பந்தய வீரர் என்ற சிறப்பிடத்தையும் பெற்றுள்ள உசைன் போல்ட் கலந்து கொள்கிறார்.  லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உசைன் போல்ட், இந்த போட்டியுடன் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற தயார் என்றும், இந்த ஓய்வு தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.   
 
ஜமைக்கா நாட்டை சேர்ந்த ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட்(30), இதுவரை 8 ஒலிம்பிக் பதக்கங்களையும், 13 முறை உலக சாம்பியன் பதக்கங்களையும் பெற்றுள்ளார். 
 

மூலக்கதை