அயோத்தி வழக்கு விசாரணை: பிரதமருக்கு காங்கிரஸ் பதிலடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அயோத்தி வழக்கு விசாரணை: பிரதமருக்கு காங்கிரஸ் பதிலடி

புதுடெல்லி: அயோத்தி வழக்கு விசாரணையில் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபலின் வாதத்தை விமர்சித்துள்ள பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. போபால் விஷவாயு வழக்கில் நிறுவனம் சார்பாக அருண்ஜெட்லி ஆஜரானது குறித்து மோடி கருத்து தெரிவிக்காதது  ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தொடங்கியது.

சன்னி வக்பு வாரியம் சார்பின் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் வாதாடி வருகிறார்.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின்னர் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

இதனை ேமாடி கடுமையாக விமர்சித்திருந்தார். மோடிக்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது:பாஜவை சேர்ந்த அருண் ஜெட்லியும் சுப்ரீம் கோர்ட் லாயர் தான்.

போபால் விஷவாயு வழக்கில் அமெரிக்க நிறுவனத்துக்கு ஆதரவாக வாதாடினார். இது குறித்து அவரிடம் பிரதமர் இதுவரை எதுவும் கேட்டதாக தெரியவில்லை.

ஆனால் கபில் சிபலை மட்டும் கேள்வி கேட்கிறார். இவ்வாறு சர்மா கூறினார்.


.

மூலக்கதை