பிரமாண்ட அம்பேத்கர் சிலையின் பாதங்களில் மலர்தூவி வணங்கிய மோடி!

விகடன்  விகடன்
பிரமாண்ட அம்பேத்கர் சிலையின் பாதங்களில் மலர்தூவி வணங்கிய மோடி!

தேசத்தின் வளர்ச்சியில் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று பிரதமர் மோடி அம்பேத்கருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். 


 

நேற்று பாபா சாகேப்  பி.ஆர். அம்பேத்கரின் 61வது நினைவு தினம். இதனையொட்டி இன்று டெல்லியில் ஜன்பத் என்னுமிடத்தில் பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச மையம், சமூக பொருளாதார மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அம்பெத்கரின் இரண்டு பிரமாண்ட  சிலைகளையும் மோடி திறந்து வைத்தார்.  அம்பேத்கர் பாதங்களில் மலர் தூவி வணங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி ‘தேசத்தின் வளர்ச்சியில் அம்பேத்கரின் பங்களிப்பு முக்கியமானது. அவருக்கு அவப்பெயர் உண்டாக்க பல்வேறு தரப்பினர் சதி செய்தனர். ஆனால், அவை தோல்வியில் முடிந்தன. இந்த நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும் அம்பேத்கரின் கனவை நம்மால் நனவாக்க முடியவில்லை. காங்கிரஸ் அம்பேத்கருக்கும் சர்தார் படேலுக்கும் அநீதி இழைத்துவிட்டது.

Prime Minister Narendra Modi inaugurates Dr. Ambedkar International Centre in Delhi pic.twitter.com/Kf3l5vxlZx


மத்தியப்பிரதேசத்தில் அம்பேத்கர் பிறந்த மகு என்னும் இடம் புனித ஸ்தலமாக உருவாக்கப்பட்டு வருகிறது. டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்’ என்று மோடி புகழாரம் சூட்டினார்.

PM @narendramodi unveils statue of Dr. #BRAmbedkar in the atrium of B R Ambedkar International Centre in New Delhi pic.twitter.com/RF6ZiZEC8j

 

மூலக்கதை