மகாராஷ்டிராவில் 41 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகாராஷ்டிராவில் 41 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பருவமழை பெய்யாதது, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டனர்.

அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்ற அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், ரூ. 34 ஆயிரம் கோடி மதிப்புள்ள விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.

இதற்கான நிதி தற்போது ஒதுக்கப்பட்ட நிலையில், பயிர்கடன் தள்ளுபடி திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

முதல்கட்டமாக ரூ. 19,537 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் 41 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக மொத்தம் 77 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் போலி விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

மீதமுள்ள விவசாயிகளுக்கு விரைவில் கடன் தள்ளுபடி செய்யப்படும்’’ என்றனர்.


.

மூலக்கதை