எல்லை பகுதியில் ஹெராயின், வெடிகுண்டு சிக்கின

தமிழ் முரசு  தமிழ் முரசு
எல்லை பகுதியில் ஹெராயின், வெடிகுண்டு சிக்கின

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தின் குர்தஸ்பூர் வழியாக, பாகிஸ்தானை சேர்ந்த நபர்கள் போதைப் பொருட்கள் கடத்திவர உள்ளதாக எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று இரவு ஒரு காரில் எல்லை வரை வந்த கடத்தல்காரர்கள் வீரர்களை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர். அப்போது  அவர்களை நோக்கி வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

பதிலுக்கு கடத்தல் கும்பலும் துப்பாக்கி சூடு நடத்தியது. தாக்குபிடிக்க முடியாத கும்பல் பாகிஸ்தான் எல்லைக்குள் ஓடிவிட்டனர்.

அப்போது அவர்கள் கொண்டு வந்த பொருட்களை போட்டு விட்டு சென்றனர்.

சோதனை செய்ததில்,  55 பார்சல்களில்  ஹெராயின் போதைப்பொருள்  இருந்தது.

மேலும் அவர்கள் கொண்டு வந்த 2 துப்பாக்கிகள் மற்றும் ஒரு பைப் வெடிகுண்டும் கைப்பற்றப்பட்டன. ஹெராயினின் சர்வதேச மதிப்பு ரூ. 6  கோடி இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

.

மூலக்கதை