தவறை சுட்டிக் காட்டிய பாஜவுக்கு ராகுல்காந்தி நன்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தவறை சுட்டிக் காட்டிய பாஜவுக்கு ராகுல்காந்தி நன்றி

புதுடெல்லி: டுவிட்டரில் தவறான புள்ளி விவரங்கள் வெளியிட்டதற்கு விளக்கம் அளித்துள்ள ராகுல்காந்தி நான் சாதாரண மனிதன், தவறு செய்வது இயல்பு என்று பா. ஜவுக்கு பதில் அளித்துள்ளார். குஜராத் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு டுவிட்டரில் தினந்தோறும் கேள்வி கேட்கப்போவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அறிவித்து இருந்தார்.

அதன்படி அவர் குஜராத் விலைவாசி உயர்வு குறித்து நேற்று முன்தினம் எழுப்பிய கேள்வியில், தவறான புள்ளி விவரங்கள் இடம்பெற்று இருந்தன. இதை பா. ஜனதா சுட்டிக்காட்டி விமர்சித்தது.

இந்நிலையில் பாஜவின் குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி நேற்று பதில் அளித்தார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:- பா. ஜ நண்பர்கள் கவனத்துக்கு. நான் நரேந்திர மோடி போல் அல்லாமல், சாதாரண மனிதன்.

நான் தவறு செய்வது இயல்பு. அதுதான் வாழ்க்கையை சுவாரசியம் ஆக்குகிறது.

தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. அதை தொடர்ந்து செய்யுங்கள்.

அப்போதுதான் என்னை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

.

மூலக்கதை