துடிப்பான ஜனநாயகத்திற்கு ராணுவம் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும்: ராணுவ தளபதி

PARIS TAMIL  PARIS TAMIL
துடிப்பான ஜனநாயகத்திற்கு ராணுவம் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும்: ராணுவ தளபதி

துடிப்பான ஜனநாயகத்திற்கு ராணுவம் அரசியலில் இருந்து விலகி இருத்தல் அவசியம் என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதாவது:- “ ராணுவம் அரசியலில் இருந்து எப்படியாவது விலகி இருத்தல் வேண்டும். சமீப காலமாக ராணுவம் அரசியல் சார்புடையதாக மாறி வருவதைப்பார்க்கிறோம். இது தவிர்க்கப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டதாக ராணுவம் இருக்க வேண்டும். அதுவே ஒரு ஜனநாயக நாட்டுக்கு அவசியம் ஆனது ஆகும்.

கடந்த காலங்களில் ராணுவத்தில் அரசியல் குறித்து விவாதிக்க கூடாது என்ற விதி இருந்தது. ஆனால், தற்போது, அந்த நிலை படிப்படியாக மாறி வருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். அரசியல் விவகாரங்களில் தலையிடமால் இருக்கும் பட்சத்தில்தான் ராணுவத்தினரால் சிறப்பாக செயல்பட முடியும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

மூலக்கதை