பகத்சிங் ஒரு மிதவாதி தான்: தகவல் சட்டத்தின் மூலம் அம்பலம்

தினமலர்  தினமலர்
பகத்சிங் ஒரு மிதவாதி தான்: தகவல் சட்டத்தின் மூலம் அம்பலம்

புதுடில்லி: ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரடிய பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் இன்று வரை தேசத்தின் தியாகிகள் தான் தகவல் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இந்திய விடுதலைக்காக போராடிய பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் ஆங்கிலேய அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். 1931-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.இந்நிலையில் ஜம்முவைச் சேர்ந்த ரோஹித் சவுத்ரி, இந்திய வரலாற்று ஆராய்சி கவுன்சில் அமைப்பிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தார்.

அதில் நாட்டின் விடுதலைக்காக போரிட்ட பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் பயங்கரவாதி என குறிப்பிடப்பட்டுள்ளதா, அ்ல்லது தியாகிகள் என அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளதா என கேட்டு மனு செய்திருந்தார்.அவரது மனுவிற்கு அளி்த்த பதிலில், நாட்டின் விடுதலைக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோரின் பங்களிப்பை எப்படி மறைக்கமுடியும். அவர்கள் இன்று வரை தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள் தான் என அரசு ஆவணங்களில் உள்ளன.இவ்வாறுஅந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை