இந்துக்களின் நம்பிக்கை மீது காங். விளையாடுகிறது:

தினமலர்  தினமலர்
இந்துக்களின் நம்பிக்கை மீது காங். விளையாடுகிறது:

லக்னோ: இந்துக்கள் நம்பிக்கை மீது காங்.விளையாடுகிறது என உ.பி. முதல்வர் கூறினார். அயோத்தி வழக்கில் ஆஜராகி வரும் காங்.கட்சியின் கபில்சிபல், வழக்கினை 2019-ம் ஆண்டு ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஆதாயத்திற்காக என பா.ஜ. குற்றம்சாட்டிவருகிறது.
இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது, அயோத்தி வழக்கு விசாரணையில் ராமர் கோயில் கட்டவேண்டுமா வேண்டாமா என்பதை காங். தெளிவு படுத்த வேண்டும். மத்தியில் காங். ஆட்சியி்ல் இருந்த போது சேதுகால்வாய் திட்டம் என்ற பெயரில் ராமர் பாலத்தை இடிக்க காங். முயற்சி செய்தது. மொத்தத்தில் அயோத்தி விவகாரத்தில் இந்துக்களின் நம்பிக்கை மீது காங். விளையாடுகிறது. என கூறினார்.

மூலக்கதை