தொடரும் காற்று மாசுபாடு பிரச்னை: மேத்யூஸ் புகாருக்கு ஷமி மறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தொடரும் காற்று மாசுபாடு பிரச்னை: மேத்யூஸ் புகாருக்கு ஷமி மறுப்பு

டெல்லி: இந்தியாவின் தலைநகரான டெல்லி, கடந்த சில வாரங்களாகவே கடுமையான காற்று மாசுபாட்டல் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு பிரச்னை சற்றே குறைந்த நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கடந்த 2ம் தேதி, டெல்லி பெரோ ஷா கோட்லா மைதானத்தில் தொடங்கியது.

இதன் 2வது நாளான நேற்று முன் தினம், பீல்டிங் செய்து கொண்டிருந்த இலங்கை வீரர்கள் திடீரென காற்று மாசுபாடு பிரச்னையை கிளப்பினர். இதனால் அவ்வப்போது ஆட்டம் தடைபட்டது.

மாஸ்க் அணிந்து கொண்டு அவர்கள் பீல்டிங் செய்ததால், பரபரப்பு உண்டானது.

 இதனால் இந்திய கேப்டன் கோஹ்லி உடனடியாக தங்கள் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இதன்பின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை வீரர்கள் மாஸ்க் அணியவில்லை.

இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருவதால், போட்டியை நிறுத்துவதற்காகவும், விராட் கோஹ்லி முச்சதம் விளாசுவதை தடுக்கவுமே  இலங்கை வீரர்கள் இவ்வாறு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, சேவாக் உள்ளிட்டோர் இலங்கை வீரர்களுக்கு எதிராக பேசினர்.



இது குறித்து பேசிய இலங்ைக அணியின் சீனியர் பேட்ஸ்மேன் ஏஞ்சலோ மேத்யூஸ், 3ம் நாளான நேற்று காற்று மாசுபாடு பிரச்னை கடுமையாக இருந்ததாக குறிப்பிட்டு, பிரச்னையை தொடர்ந்தார். இதனை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மறுத்துள்ளார்.

இலங்கை வீரர்கள் சித்தரிக்கும் அளவிற்கு, அவ்வளவு அதிகமாக காற்று மாசுபாடு இல்லை எனவும் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ஆனால் காற்று மாசுபாடு என்பது நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய அம்சம் எனவும் அவர் கூறியுள்ளார்.


.

மூலக்கதை