ஹபீஸ்-முஷாரப் தேர்தல் கூட்டணி: பாக். அரசியலில் புதிய திருப்பம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹபீஸ்முஷாரப் தேர்தல் கூட்டணி: பாக். அரசியலில் புதிய திருப்பம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தீவிரவாத இயக்க தலைவர் ஹபீஸ் சயீத் மற்றும் முன்னாள் அதிபர் முஷாரப் ஆகியோர் தேர்தல் கூட்டணி அமைக்க உள்ளனர். பாகிஸ்தானில் உள்ள லஸ்கர் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் அண்மையில் வீட்டு காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

அவர் பாகிஸ்தானில் 2018ம் ஆண்டு வர விருக்கும் தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஹபீஸ் சயீத் விடுதலைக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

 தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்க தவறினால் அமெரிக்கா கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் என அந்நாடு எச்சரித்துள்ளது.

இதற்கிடையில் 2018ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள பொது தேர்தலில் முன்னாள் அதிபர் முஷாரப் 20க்கும் மேற்பட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறார். தற்போதைய ஆளும் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அண்மையில் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

எனவே தற்போது எழுந்துள்ள எதிர்ப்பு அலையை சாதகமாக பயன்படுத்த முஷாரப் திட்டமிட்டு வருகிறார்.

இதற்கிடையில் மும்பை தாக்குதல் தீவிரவாதியான லஸ்கர் அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்துடன் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

சில தினங்களுக்கு முன் முஷாரப் அளித்த பேட்டியின் போது, தான் லஸ்கர் அமைப்பின் தீவிர ஆதரவாளர் என குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில் தேர்தல் கூட்டணி குறித்து பாக், டிவி ஒன்றிற்கு ஹபீஸ் சயீத் அளித்த பேட்டியில்,  எங்களுடன் கூட்டணி அமைக்க முஷாரப் விரும்புகிறார்.

அதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.

தற்போது இந்த விவகாரம் பாகிஸ்தான் அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை